Thursday, January 13, 2011

வாலிப வயசு

வஞ்சத்தை எண்ணாத வயசு

வருவதை எதிர்கொள்ளும் வயசு

சுமையினை தாங்காத வயசு

யார் சொல்லும் கேட்காத வயசு

பொறுப்பினை ஏற்காத வயசு

பொய் பல சொல்கின்ற வயசு

சிகரத்தை அடைய நினைக்கும் வயசு

சிலர் சீரழிந்து போகின்ற வயசு

வாலிப வயசு

புரிந்து கொள்ள முடியாத தினுசு

காதல்


பகலுக்கென சூரியன்

உண்டு பிரகாசமாய்


இரவுக்கென சந்திரன்
உண்டு ஒலியாய்


காக்கைக்கென கூட்டம்
உண்டு அழகாய்


குருவிக்கென கூடு
உண்டு சுகமாய்


மரத்திற்கென காற்று
உண்டு இதமாய்


இதைப்போல்,

எனக்கென்று மனம்
உண்டு காதலாய்


அதில் உனக்கென இடம்
உண்டு முழுதாய்

காதல் கண்ணீர்

உன்னை வாழ்த்த மனமில்லை!

உன்னை நினைக்காமலிருக்க முடியவில்லை!

உன்னை மறக்கவும் முடியவில்லை!

உன்னோடு வாழவும் வழியில்லை!

ஆதலால்,

நீன் மணவறையில் இருக்கும்
அதே வேளையில்


நான் கல்லறையி்ல்.....

Wednesday, January 12, 2011

மீண்டும் காதல்!


முழு நிலவாய்
இருந்த என்னை

சுவடே இல்லாமல்
அழித்து விட்டது அவள் காதல்!

மீண்டும் காதலிக்கிறேன்
முழு நிலவாய் ஆவதற்கு!

ஆசையில் ஓர் கடிதம்




இணைந்திருந்தோம் இந்நாள் வரை

நம் நடுவே வந்துள்ளது பிரிவெனும் தடை

பிரிவு என்பது தற்காலிகம்!

நட்பு என்பது நிரந்தரம்!

மாற்று தேசம் சென்றாலும் மறக்காதது நட்பு!

மரணம் வந்தாலும் மறையாதது நட்பு!

நம் நட்பின் அழகையும், ஆழத்தையும்,

அதிகப்படுத்தவே இந்த பிரிவு!

என் அன்பு நண்பனுக்கு

ஆசையில் ஓர் கடிதம்!

தாயின் பிரிவு



கருவில் சுமந்த
கனி அமுதே!


பாலூட்டி வளர்த்த
பவளக்கொடியே!


என்னை காத்த
கடவுளே!


ஆதரவாய் இருக்க
வேண்டிய நீயே!


என்னை மட்டும்

இந்த பூமியில் தனியாய்
தவிக்க விட்டு சென்றுவிட்டாயே!
பத்து மாதம்
சுமந்தாய் என்னை!

உன் சொர்க்கத்தில்
சுகமாய் சுருண்டுக் கிடந்தேன்!


வெளிவராத என்னை
கிழித்து எடுத்தனர்!


பிறக்கும் போதே
ஆயுதத்தை காட்டிவிட்டனரே!


நான் என்ன செய்வது?


தொட்டில் பழக்கம்
சுடுகாடு வ‌ரைக்கும்!

என்னவள்



காலைப் பனியும் சுடுகிறது...

கரும்புச் சாரும்
கசக்கிறது...

தண்ணீரும்
தெவிட்டுகிறது...

என்னவளின் கடைக்கண் பார்வைப்
படாததால்!

Saturday, January 8, 2011

மலரின் குரல்



செடியில்
ஒன்றாய் இருந்த நம்மை,

வெட்டிப் பிரித்து விட்டார்கள்!

இனி நானும்
வாழா வெட்டிதான்!

ஆனந்த கண்ணீர்



நானும் பாக்கியசாலிதான்!

பிறந்த
குழந்தையைக் கண்ட தாயின்
 
பேரானந்தக் கண்ணீரால்!

மரணம்


அன்று கருவறையில்
இருந்தபோது கிடைத்த
அதே கதகதப்பு...

இன்று
கல்லறையில்...

ஆம்...
நான் மீண்டும்
தாயிடம் சென்றுவிட்டேன்!

காதல்


புதையல்
தேடிச்சென்ற இடத்தில்....

புதைக் குழியில்
விழுந்துவிட்டேன்....

காதல் தோல்வி


அவள் பெயரை
என் இதயத்தில்
எழுதிவைத்துள்ளது
தெரியவில்லையாம்...

சரிதான்...

ரத்தத்தில் எழுதியது...
என் தவறுதானே...

Thursday, January 6, 2011

அழகுத் தாய்


கறந்த பாலை
கிண்ணத்தில்
கலந்துகொண்டிருக்கிறாள்!

குழந்தையின்
அழுகையை
அடக்க அல்ல!

தன்னுடைய
அழகு நிலைக்க!

அழகுத் தாய்!

விதவை

காலம் முழுவதும்
நான் வைத்துக் கொள்ள
நினைத்ததை...

நேற்று வந்தவன்
பறித்துச் சென்று
விட்டான்...

வேதனையான
விதவையின் வாழ்க்கை!

Chicken

பொத்தி வைத்தவள்
பெற்றெடுத்ததாலே

பெற்றுக்கொண்டவர்
தட்டிதட்டி உடைத்தாலே

நான்
கருக்கலைந்து நிற்கிறேன்
கருந்தகட்டுக்குள்ளே!

காகிதக் கப்பல்


விதியுடன் விளையாட
நேரம் வந்துவிட்டது!

நான்காய் மடித்து
நடுவில் பிரித்து விட்டார்கள்!

என் மரணப்
பயணத்தை தொடர்கிறேன்!

குழந்தையின் குரல்

கருவறையை விட்டு
கல்லறை நோக்கி

இனி
எத்தனை காலம்
பயணிக்கப் போகிறேன்?

உனக்காக

எனக்காக...

தாயிடம் தகராறு செய்தாய்

தந்தையிடம் அடிவாங்கினாய்

அண்ணனிடம் வாதாடினாய்

அக்காவிடம் ஆதரவு கேட்டாய்

இப்படி எனக்காகவே நீ இருக்க

நான் என்றும் உனக்காக...

Tuesday, January 4, 2011

ஆள்காட்டி!













உழைக்கும் கரத்தில்
ஒன்றியிருந்தாலும்!

உன்னை மட்டும்
வெறுக்கிறேன்!

நீ ஆள்காட்டியானதால்!

முத்தம்

ஒரு நொடியில்
உடல் முழுதும்
வியர்த்தது!

வியர்க்காத இடத்தில்
நீ கொடுத்த
முத்தத்தால்!